அதுல்யா ரவி தமிழ் திரைப்பட நடிகை ஆவர் . முதல் முதலில் நடிகை அதுல்யா ரவி தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு தாமதம் ஆக ” காதல் கண் கட்டுதே ” என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்க பட்ட படம் . வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் ,மற்றும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.
2018-ல் துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி ,பாலா சரவணன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஏமாலி’ அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார் . அதன்பின் 2019ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக “சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற அதிரடித் திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அதுல்யா கதாநாயகியாக மட்டுமில்லாமல் ” நாடோடிகள் 2″, “அடுத்த சாட்டை ” என சில படங்களில் கதாபாத்திர வேதங்கள் கூட நடித்திருந்தார்.
படவாய்ப்புகள் வர வர கவர்ச்சியில் கவனம் செலுத்த துடைங்கிய அதுல்யா ரவி . முதல் படத்தில் பவ்யமாக நடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை ஏற்றிக்கொண்டு போன அதுல்யா ரவி தற்போதுவரை கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் கவர்ச்சி வேடங்களில் நடித்துவருகிறார் . தற்போது பாக்கியராஜ் மகன் சாந்தனுவுடன் ” முருங்கைக்காய் சிப்ஸ் ” என்ற படத்தில் படு கிளமெராக நடித்துள்ளார். அப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் இடைவேளையில் அதுல்யாவும் , நடிகர் ஷாந்தனுவும் சுட்டித்தனமாக அடித்து விளையாடும் வீடியோ ஒன்றை நடிகர் சாந்தனு ட்விட்டரில் ” என்ன பார்கவ இதெல்லாம் ” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் .