கவினின் சட்டையை கழட்டி பிரியாமணி….

இன்று வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் ஆரம்ப காலத்தில் பிரியா பவானி ஷங்கரோடு டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வந்தார். அதில் Judge- ஆக பங்கேற்ற ப்ரியாமணியை பார்த்து அடிக்கடி Flirt செய்வார் நம்ம கவின், ஒரு கட்டத்தில் பிரியாமணி, “என்னை Impress பண்ணனும்னா, உன் சட்டையை கழட்டு” என கூறி சட்டையை கழட்டி உள்ளார், அப்போது கவினின் முகம் வெட்கத்தில் சிவக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவ, கவின் ரசிகர்கள் கப்சிப்.

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து உள்ளார். இவர் நடித்த FAMILYMAN 2 Web Series விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருக்கிறது.

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள். இதை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறாராம், மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.