பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீப நாட்களாக சண்டைக்கு குறைவு இல்லாமல் இருந்து வருகின்றது.
அதிலும் பிரியங்கா தாமரை இடையே தான் கடும் வாக்குவாதம் நிலவி வருகின்றது. இந்நிகழ்ச்சியினைக் காண ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், தற்போது நடக்கும் சண்டை அடுத்த வார எவிக்ஷனை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகின்றது.
முன்பு எதுவும் தெரியாமல் இருந்த தாமரை தற்போது விளையாட்டினை புரிந்து கொண்டு தனி ஆளாக விளையாடி வருகின்றார். அதுமட்டுமின்றி யாருக்கும் ஜால்ரா அடிக்காமல் விளையாடும் தாமரைக்கும் தற்போது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் தாமரை பிரியங்கா இடையே கட்சி பேச்சுவார்த்தையின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.