குட்டி குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை வைத்து வறுவல் செய்து சுவைக்கலாம்.
கடல் வகை உணவுகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால் வாரம் இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
அதுவும் நெத்திலி மீனில் எண்ணற்ற ஆரோக்கியம் நிறைந்திருக்கின்றது.
புரோட்டின், விட்டமின் ஈ, செலினியம், ஒமேகா 3 பேட்டி ஆசிட், மினரல்ஸ், விட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. இத்தகைய சத்து நிறைந்த நெத்திலி மீனை வைத்து டேஸ்டியான மீன் வறுவல் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் – அரை கிலோ
மிளகாய் தூள் – 25 கிராம்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
ஓமம் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பூண்டு – ஐந்து பல் (நசுக்கியது)
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
சோல மாவு – 25 கிராம்
அரிசி மாவு – 25 கிராம்
முட்டை வெள்ளை கரு – அரை முட்டை
செய்முறை
ஒரு கிண்ணத்தில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு, அதில் சோல மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின், குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான பொடி மீன் வறுவல் ரெடி. இதை நெத்திலி மீன் வறுவல் என்றும் கூறலாம்