இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 744 பேர் பாதிக்கப்பட்டதோடு நேற்றைய தினம் (08) 22 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்தார்.
இலங்கையில் இதுவரை மொத்தமாக 5 இலட்சத்து 70ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 ஆயிரத்து 555 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 12 ஆயிரத்து 294 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் 356 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 5 இலட்சத்து 43 ஆயிரத்து 823 பேர் குணமடைந்துள்ளனர்.