பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சண்டையிட்டுக் கொண்ட போட்டியாளர்கள் தற்போது தனது அன்பினை வெளிக்காட்டி கண்கலங்க வைத்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிரபல ரிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தினை கொண்டுள்ளது.
டாஸ்கின் காரணமாக நாளுக்கு நாள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொண்டனர் போட்டியாளர்கள். அதிலும் நேற்றைய தினத்தில் பாவனி அபிநய்யுடன் பழகுவதை போட்டியாளர்கள் காதல் என்று கூறி கடுப்பேற்றியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த பாவனி அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டையிட்டு பயங்கரமாக கூச்சலிட்டார். இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் பாவனி பாசத்திற்கு ஏங்கியுள்ளார்.
இதனால் ராஜு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கு கூறியுள்ளார். மேலும் பாவனி சண்டையிட்ட அனைவரையும் சென்று கட்டியணைத்து பாசத்தினை வெளிக்காட்டியுள்ளார்.