இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் வகையில் நுவரெலியா சுற்றுலா பிராந்தியத்தில் முதல் முறையாக கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்க சுவிஸர்லாந்து முதலீட்டாளர் ஒருவருடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுற்றுலா சபை என்பன இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
சுற்றாடலுக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வகையில், நானு-ஓயா தொடருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிறகரி குளம் வரை இந்த கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளளது.
ஆரம்பிக்கப்படட நாளில் இருந்து 18 மாத காலத்திற்குள் திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த கேபிள் கார் திட்டத்திற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.