மெக்சிகோவில் கோர விபத்து

மெக்சிகோவில் நெடுஞ்சாலையில் சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்தனர், அவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.