சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படங்களை முடித்துவிட்டு, இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கவுள்ள படத்தில் நடிப்பார் என்று சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இதற்கு முன் அடங்கமறு எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி கதையானகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி தங்கவேலு மற்றும் சூர்யாவின் இந்த புத்தம்புதிய கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.