நடிகர் சூர்யா- ஜோதிகா இருவரும் கடற்கரையில் சாதாரணமாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.
“ஜெய் பீம்“ திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா- ஜோதிகா இருவரும் குழந்தைகளுடன் துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
அந்தப் பயணத்தின்போது அவர்கள் கடற்கரையில் நடந்து சென்றிருக்கலாம் என்றும் அந்தப் புகைப்படம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்றும் ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
குறித்த புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அழகிய ஜோடிக்கு கண் வைத்து வருகின்றனர்.