மோட்டார் பந்தயத்தில் கலந்து கொண்ட மகிந்தவின் இளைய புதல்வர்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச மோட்டார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை கட்டுகுருந்த பாதையில் நடைபெற்று வரும் மோட்டார் பந்தயப் போட்டியில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியில் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார்.