தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்துவந்த நிலையில் இன்றுகாலை தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வரும் நிலையில் தங்கம் விலை குறையுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது.

ஆனால் இன்று தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,304-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ரூ.4,538-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.65,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அதேவேளை ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10-க்கு விற்பனை செய்யப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.