அதிக விலைக்கு சீமெந்து விற்ப்பவரா அவதானம்!

நிர்ணயிக்கப்பட்டுள்ள அதியுட்ச சில்லரை விலைக்கு அதிகமாக சீமெந்தை விற்பனை செய்வதனை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அவ்வாறு அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சீமெந்து நிறுவனங்களினால் தற்போது 50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூட்டை சீமெந்து ஆயிரத்து 275 ரூபா என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த விலைக்கு அதிகமாக சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.