மஞ்சள் பால் அருந்துவதால் இத்தனை நன்மைகளா?..!

தினமும் காலை மாலை மஞ்சள் சேர்த்த பால் அருந்தி வந்த ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தரவல்லது அவை குறித்து பார்போம்.

பாலில் அருந்துவதால் பல ஊட்டசத்துக்கள் கிடைக்கும்.  அதே போல பாலில் மஞ்சள் போன்ற  மசாலா பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆற்றலை தரும். மஞ்சள் பாலை ஆயுர்வேத மருத்துவத்தில் அமிர்தம் என அறியப்படுகிறது. சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களும் மஞ்சள் பால் அருந்தினால் விரைவாக குணமாகும்.

செய்முறை:

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்
பட்டை மற்றும் ஜாதிபத்ரி தூள் – சிறிதளவு

முதலில் நெய் அனைத்து பொருட்களையும் சேர்த்து சூடாக்கவும். அதனை சூடான பாலுடன் கொதிக்க வைத்து அதில் சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

மஞ்சள் பாலில் கிடைக்கும் நன்மைகள்:

நோய் எதிர்பாற்றலை அதிகப்படுத்தும்.  நிம்மதியான உறக்கத்திற்கு உதவும். வயிறு உப்புசம், மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறு போன்ற்றை சரிசெய்யும். ஒற்றைத் தலைவலிக்கு தீர்வளிக்கும்.

காலையில் காப்பி டீக்கு பதிலாக இந்த பாலை அருந்தலாம். அதே போல இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு அருந்த வேண்டும்