நாட்டில் கோவிட் தொற்று காரணமாக மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரையில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,595 ஆக இருந்தது, தற்போது 14,614 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று மேலும் 538 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் 571,188 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 572,726 ஆக உயர்வடைந்துள்ளது.