ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தென்ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. லேசானா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று சரியாகும் வரை சிரியில் கேப் டவுனில் தனிமைப்படுத்திக் கொள்வார். அதிபருக்கான அனைத்து பொறுப்புகளையும், துணை அதிபர் டேவிட் மபுஜா கவனித்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சிரில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்திருந்தார். அப்போது அதிபர் மற்றும் அவருடன் சென்றிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டிசம்பர் 8-ந்தேதி ஜோகன்னஸ்பர்க் திரும்பினார். அப்போது அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் முடிவு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.