இறைவனால் படைக்கட்ட அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிக்கிறது. அன்றாடம் ஏதாவது ஒரு காய்கறி, கீரை வகைகள் அல்லது பழங்களை சாப்பிட்டு வந்தாலே உடல் நலமாக இருக்கும்.
அந்த வகையில், விளாம்பழத்தில் இருக்கும் நன்மைகளை பற்றி நாம் இங்கே தெரிந்துகொள்வோம். விளாழ்பழம் ஆனது அஜீரண கோளாறைக் குணப்படுத்தும் விளாம்பழத்தில், உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகமாக இருக்கின்றன. இவை, எலும்பு, பல்லுக்கு பலம் கொடுப்பதோடு, இளநரையைப் போக்கும்.
தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 நாட்களுக்கு விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பான தொல்லைகள் அனைத்தும் நீங்கும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
விளாம்பழத்தில் வெல்லம் கலந்து சாப்பிட்டால், நரம்பு தளர்ச்சி, பித்தம், கால்சியம் குறைபாடு, என பல நோய்கள் ஓடிப்போகும். விளாம்பழத்தை முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், முகம் பளபளக்கும் . உடல் வறட்சி உள்ளவர்கள் தொடர்ந்து விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமம் மின்னும்.
இதில், விளாம்பழத்தில் விட்டமின் பி12 அதிகம். எனவே, பெண்களுக்கு இது தரும் பலன்கள் அளவிட முடியாதது. மாதவிடாய் கோளாறுகள் குறிப்பாக, அதிக உதிரபோக்கு, வெள்ளைபடுதல் உள்ளவர்கள் விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பிரச்சனைகள் தீரும்.
உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்ததாக கருதப்படும் விளாம்பழம், ரத்த விருத்திக்கு உதவவதோடு, ரத்தத்தை சுத்திகரிக்கிறது. எனவே, ரத்த சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம்.
தினமும் விளாம்பழத்தைக் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம்பழம் காயாக இருக்கும்போது துவர்ப்பு சுவையுடனும். கனிந்து பழமான பிறகு, துவர்ப்பும் புளிப்பும் கலந்த வித்தியாசமான சுவையில் இருக்கும்.
நறுமணம் வீசும் அருமையான விளாம்பழத்தில் 70 சதம் ஈரப்பதம் உண்டு என்பதால், இது எந்த காலத்திலும் உண்ண ஏற்றது. விளாம்பழத்தில் 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.