பொரளை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் சில தினங்களுக்கு முன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நகைகளை கொள்ளையிட்டு சென்றிருந்தனர்.
இதே நிலையில், முழு முக தலைக்கவசம் அணிந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.
மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நகைக் கடையில் கொள்ளையிடப்பட்ட நகையின் பெறுமதி 3.5 மில்லியன் ரூபா என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த கடையில் இருந்து சுமார் 30 பவுண் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நகைக் கடைக்கு வந்து ஊழியர்களையும்,வாடிக்கையாளர்களையும் மிரட்டி இரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தி நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.