வெண்ணிற உடையில் பொன்னிற ஒளியாய் மின்னும் சாக்ஷி‌!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் திரைப்படங்களில் நிறைய குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர், தமிழ் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் நிறைய துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், சாக்ஷி அகர்வால் திரைப்படங்கள் மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார். 2018-ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.

இதற்கு முன்பு, சாக்ஷி நிறைய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட காலா படத்திற்கு பின்னர் தான் கவனிக்கப்பட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனை தொடர்ந்து, அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இதன்பின், விஜய் டிவியின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமடைந்தார். இத்தகைய நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோ தற்போது வைரலாகி வருகின்றது.