இந்தியாவை உலுக்கும் ஒமிக்ரான்..

புதிய உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், சண்டிகர், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே ஒமிக்ரான் தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் குஜராத் மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து குஜராத் மாநிலம் சூரட் நகராட்சி துணை சுகாதார ஆணையர் கூறியதாவது, கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இருந்து டெல்லி வந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஓரிரு நாட்கள் இடைவெளியில் அகமதாபாத்தில் இரண்டாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பரிசோதனையிலும் நெகட்டிவ் வந்துள்ளது.

பிறகு தொற்று அறிகுறிகள் தெரிந்த நிலையில், மூன்றாவது முறையாக பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் சூரட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளார்.