ஆஸ்கர் வரை சென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பிரபலம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்.
அவர் பார்க்காத மேடை இல்லை, சந்திக்காத பிரபலங்கள் இல்லை, ஆனால் எப்போதும் எல்லா இடத்திலும் சாதாரணமாகவே இருப்பார். அதுவே ரசிகர்கள் அவரைப் பார்த்து ரசிக்கும் ஒரு விஷயம்.
இப்போது அவரது இசையமைப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருக்கிறது. படத்தின் இசை உருவாகும் விதத்தை கூட அண்மையில் அவர் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் தனது மகள், மகனுடன் எடுத்த கியூட்டான செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.