சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு கொழும்பு மற்றும் துபாயில் இருந்து 2 விமானங்கள் மூலம் வந்தவர்களிடம் இருந்து தங்கப்பாளங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
துபாய் மற்றும் கொழும்பில் இருந்து வந்த 6 பேரிடம் இருந்தே பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப்பாளங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்கு பின் முரணான வகையில் பேசியதை அடுத்து அவர்கள் சோதனையிடப்பட்டனர்.
இதன்போது குறித்த 6 பேரும் அணிந்து இருந்த காலணி சற்று வித்தியாசமாக இருந்ததால் அதனை சோதனையிட்டபோது சுமார் .40 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள 928 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.