ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தர தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழமையான மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி நாளைய தினம் நாடு திரும்பவிருந்தபோதும் இன்று அதிகாலையே திரும்பியுள்ளமையை அடுத்தே இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலரும் பிபி ஜெயசுந்தரவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டனர்.
அவரை பதவி விலகுமாறும் அவர்கள் வலியுறுத்தல்களை விடுத்தனர்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசுவதற்கு பிபி ஜெயசுந்தர முன்வரவில்லை என்றும் அமைச்சர்கள் குற்றம் சுமத்தினர்.
இதனையடுத்தே செவ்வாய்க்கிழமையன்று அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பு இடம்பெறவில்லை.
மாறாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசரமாக அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.
இந்தநிலையில் பிபி ஜெயசுந்தர பதவி விலகப்போவதாக தகவல்கள் வெளியானபோதும் இன்னும் அது இடம்பெறவில்லை.
அதேநேரம் ஜனாதிபதியின் புதிய செயலாளராக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் அனுர திசாநாயக்க பரிந்துரை செய்யப்பட்டபோதும் ஜனாதிபதி கோட்டாபயவின் ஒப்புதல் இன்னும் அதற்கு கிடைக்கவில்லை.