இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம்,(Transparency International Sri Lanka (TISL) டிசம்பர் 09 ஆம் திகதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நாட்டில் மோசடிகள் மற்றும் ஊழலைக் கண்காணிப்பதற்கான இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
”அபேசல்லி” Apesalli.lk என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த இணையத்தளம் இயக்கப்படுகிறது அத்துடன் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் முறைபாடுகளை வழங்க பொது மக்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
Apesalli.lk, தேர்தல் பிரசாரக் காலங்களில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட தேர்தல் மீறல்கள் குறித்து முறையிடவும் உதவுகிறது.