நாட்டில் சுமார் 14 லட்சம் பேருக்கு இதுவரையில் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
20 வயதை கடந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் இரண்டாவது கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டு மூன்று மாதங்கள் கடந்திருந்தால், பூஸ்டர் டோஸ் ஏற்றிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எந்தவொரு தடுப்பூசி ஏற்றும் நிலையத்திலும் இந்த பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ள மொத்த எண்ணிக்கை 576194 என்பதுடன், 14661 பேர் இதுவரையில் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.