இலங்கையில் வடக்கு மாகாணத்தில் வேலையில்லா திண்டாட்டம் தற்போது உச்சம் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இலங்கையில் மட்டும் 25 முதல் 29 வயதுடையவர்களில் 9.2 சதவீதமானோர் தொழில் வாய்ப்பின்றி இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண தரக் கல்வி பயின்றவர்களில் 7.2 சதவீதமானோர் தொழில் வாய்ப்பின்றி உள்ளதாகவும், உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு பயின்றவர்களில் 9.1 சதவீதமானோரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது வடக்கில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் அரசாங்கம் அடுத்த வருடம் வேலை வாய்ப்பை வழங்காது என்று அறிவித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க முடியுமான பல தொழிற்சாலைகள் வடக்கில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது.