கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை பின்பற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தொடர்பில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சுற்றரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள், வரும் ஜனவரி 18-ம் திகதி முதல், 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும், அதன்பிறகு சம்பளம் இல்லாத விடுப்பில் 6 மாதங்களுக்கு வைக்கப்பட்டு, பின்னர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அதற்கான முறையான விண்ணப்பித்தல் மூலம் விலக்கு பெறலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.