பாடசாலை வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆசிரியரின் கன்னத்தில் மாணவர் ஒருவரின் தாய் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கம்பஹாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த வாரம் கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்திலுள்ள பாடசாலையில், ஆசிரியர் ஒருவர் ஒழுக்காற்றுப் பிரச்சினை காரணமாக மாணவர் ஒருவரை தண்டித்துள்ளார்.
மேலும், இதை அறிந்த மாணவரின் பெற்றோர், பாடசாலையின் அதிபரை சந்தித்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில் அதிபர் விளக்கப்படுத்தியுள்ளதுடன் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து மாணவரின் பெற்றோர் பாடசாலையிலிருந்து வெளியேறி செல்ல முற்பட்டுள்ளார். எனினும், தரம் 4வது வகுப்புக்கு சென்று அங்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆசிரியரின் கன்னத்தில் மாணவனின் தாய் அறைந்துள்ளார்.
இந்நிலையில், பாடசாலை நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளனர். இதையடுத்து, வெயாங்கொடை பொலிஸார் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையில் சுமூக நிலைமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.