இந்தியாவில் கடந்த ஆண்டில் மாத்திரம் 22 ஆயிரத்து 372 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக இந்தியாவின் தேசிய குற்றப் பதிவுகள் பணியாகம் (National Crime Records Bureau -NCRB) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாள் ஒன்றுக்கு 61 பெண்கள் என்ற வீதத்திலும் 25 நிமிடங்களுக்கு ஒரு பெண் என்ற வகையிலும் இந்தியாவில் இல்லத்தரசிகளான பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 52 தற்கொலைகள் பதிவாகியுள்ளதுடன் இதில் 14.6 வீதமானோர் இல்லத்தரசிகள். அத்துடன் கடந்த ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானனோர் பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய குற்றப் பதிவுகள் பணியாகத்தின் புள்ளிவிபரங்களின்படி 1991 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் 20 ஆயிரம் இல்லத்தரசிகள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2009 ஆம் ஆண்டு 25 ஆயிரத்து 92 ஆக அதிகரித்தது.
பணியகத்தின் பதிவுகளுக்கு அமைய தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சினைகள் அல்லது திருமணம் சம்பந்தமான பிரச்சினைகள் எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த மரணங்களுக்கான பிரதான காரணம் வீட்டுக்குள் நடக்கும் வன்முறைகள் என மனநல சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய அரசு அண்மையில் நடத்திய கருத்து கணிப்புகளுக்கு அமைய 30 வீதமான பெண்கள் தமது கணவனின் வன்முறைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தியாவில் கிராமங்களை சேர்ந்த பெண் பிள்ளைகள் 18 வயது பூர்த்தியானதுடன் திருமணம் செய்து வைப்பது பரவலாக காணப்படும் நிலைமையாகும். இந்த நிலைமையால் தொடர்ச்சியான கல்வி மற்றும் இளமை கால சுதந்திரம் என்பன தடுப்புக்கு உள்ளாகின்றன. இது கடும் மன அழுத்தம் வரை அதிகரிக்கக் கூடும்.
எவ்வாறாயினும் அண்மைய காலமாக சர்வதேச ரீதியாக அதிகளவான தற்கொலைகள் இந்தியாவிலேயே இடம்பெறுகின்றன. உலகில் தற்கொலை செய்துக்கொள்ளும் நபர்களில் நான்கில் ஒரு வீதத்தினர் இந்திய ஆண்கள்.
சர்வதேச ரீதியில் தற்கொலை செய்துக்கொள்ளும் 15 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களில் 36 வீதத்தினர் இந்தியாவை சேர்ந்த பெண்கள்.
இந்தியா போன்ற சமய நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக நிலைமை காணப்படும் நாட்டில் தற்கொலைகள் பற்றி பகிரங்கமாக பேசப்படுவதில்லை.
இந்த சம்பவங்கள் வெட்கம் மற்றும் அகௌரவமாக கருதப்படுவதுடன் பல குடும்பங்கள் இந்த சம்பவங்களை மறைத்து விடுகின்றன.
இந்தியாவில் கிராமபுறங்களில் மரண பரிசோதனைகள் அவசியமில்லை என்பதுடன் அது பணம் மற்றும் சாதி அடிப்படையில் தங்கியுள்ளது. இந்திய பொலிஸார்
இப்படியான தற்கொலை சம்பவங்களை திடீர் மரணங்கள் என பதிவு செய்வது இதில் முக்கியமான விடயமாகும்.