நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார். முதலில் திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்த இவர் . கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு , அவரின் அடுத்த படமான ” பச்சைக்கிளி முத்துச்சரம்” திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து நடித்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். இவர் பாடல் , நடிப்பு அல்லாமல் சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . குறிப்பாக தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “ஆடுகளம்” படத்தில் டாப்சிக்கு இவர் தான் டப்பிங் பேசினார்.
ஆண்ட்ரியா நடித்த “ஆயிரத்தில் ஒருவன் “, “வடசென்னை”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படங்களில் கவர்ச்சியை தவிர்த்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட வேடங்களில் நடித்திருந்தார்.
ஆரம்ப காலங்களில் கவர்ச்சி படங்களில் நடித்து கொண்டிருந்த ஆண்ட்ரியா கதாபாத்திர வேடங்கள் நடிக்க துடங்கினார் . இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.