எதிர்வரும் நாட்களில் உள்ளூர் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாரஹேன்பிட்டி மற்றும் பொகுந்தர பொருளாதார மத்திய நிலையங்களில் நேற்று ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
பல பொருளாதார மையங்களில் ஒரு கிலோகிராம் கறி மிளகாய் ரூ.800க்கு விற்கப்பட்டது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காய் ரூ. 590 மற்றும் ரூ. 600 இற்கு விற்கப்பட்டது.
உள்ளூர் விளைபொருட்களில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது.
உர நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது.