உடல் எடையைக் குறைக்க இயற்க்கை நீர்

ஏலக்காய் இந்திய உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய மசாலா பொருட்களில் இன்றியமையாத ஒன்றாகும். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன.

வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் அதனை நாம் பயன்படுத்தலாம். இதில் புரதம்,மாவுச்சத்து, நார்ச்சத்து,கால்சியம்,உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

சித்தமருத்துவத்தில் ஏலக்காய் மிகப்பெரிய பங்காற்றுகிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த ஏலக்காய் உடல் எடைகுறைப்பில பெரிதும் பங்காற்றுகின்றது.

உண்மையில் ஏலக்காய் நீர் உடல் எடையை குறைக்க உதவுமா? அது எப்படி என இங்கு தெரிந்து கொள்வோம்.

ஏலக்காய் மெலடோனின் ஒரு நல்ல ஆதாரமாகும். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது, இது வேகமாக எடை இழக்க உதவுகிறது.

உணவுக்குப் பிறகு வாய் புத்துணர்ச்சியாக வழங்க ஏலக்காயை மென்று பிறகு வெளியாகும் சாறுகள் செரிமானத்தை மேம்படுத்தவும் கொழுப்பு இழப்பை துரிதப்படுத்தவும் உதவும்.

நீங்கள் வேகமாக உடல் எடையை குறைக்க திட்டமிட்டால், 4-5 ஏலக்காய்களை ஒரு கிளாஸ் வெந்நீரில் போட்டு பெட் டைம் பானமாகச் சேர்த்து மாற்றத்தைக் காணவும்.