இளம்பெண்ணின் கல்லீரலில் வளர்ந்த கரு!!

கனடாவில், பெண் ஒருவர் மாதவிடாய் பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளார்.

மருத்துவப் பரிசோதனையில், அவர் கர்ப்பமுற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவரது கர்ப்பப்பையில் கருவைக் காணவில்லை.

ஆச்சரியமுற்ற மருத்துவர்கள் அவரை ஸ்கேன் பரிசோதனைகளுக்கு உட்படுத்த அவர்களுக்கு ஒரு மாபெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

ஆம், அந்தப் பெண்ணின் கல்லீரலுக்குள் அந்தக் கரு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அதாவது, பொதுவாக கருவுற்ற முட்டை, அதாவது கரு, பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வளரும். சில நேரங்களில் அது கர்ப்பப்பையை வந்தடைவதற்கு முன்பே, பாலோப்பியன் குழாய் ( fallopian tube) என்னும் இடத்தில் அமர்ந்து, அங்கேயே வளரத்தொடங்கிவிடும்.

இதை கர்ப்பப்பைக்கு வெளியிலான கருவுறுதல் (ectopic pregnancy) என்பார்கள். இத்தகைய கருவுறுதலின்போது, பொதுவாக அந்தக் கரு நீண்ட நாள் வளராது, அதாவது அந்தக் குழந்தை இறந்துவிடும். இதனால், தாய்க்கும் ஆபத்து ஏற்படலாம்.

எனது அனுபவத்தில் நான் இப்படி ஒரு விடயத்தைப் பார்த்ததில்லை என்கிறார் மருத்துவர் Michael.

ஆனால், இந்தப் பெண்ணின் விடயத்தில் கர்ப்பப்பைக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத கல்லீரலுக்குள் அமர்ந்து கரு வளரத் துவங்கியுள்ளது.

மருத்துவர்கள் அந்தப் பெண்ணைக் காப்பாற்றிவிட்டார்கள். ஆனால், அவரது குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை!