யாழில் விகாரைக்கு அருகாமையில் உள்ள புத்தர் சிலை மாயமாயுள்ளது!

யாழ்.காங்கேசன்துறையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கண்காணிப்பில் உள்ள கெமுனு விகாரைக்கு முன்பாகவுள்ள குமார கோவிலின் பிள்ளையார் சிலை மாயமான நிலையில் பிரதேசவாசிகள் கலக்கமடைந்துள்ளனர்.

குறித்த பிள்ளையார் சிலை கடந்த 9ம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இதெவேளை குமார கோயில் காணியை ஆக்கிரமித்து பாதுகாப்பு தரப்பினர் கெமுனு விகாரையை கட்டியிருக்கின்றனர்.

மேற்படி பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்தபோது இந்த ஆக்கிரமிப்பு மற்றும் விகாரை அமைப்பு பணிகள் இடம்பெற்றிருந்தது. அதன்பின்னர் அந்த பகுதி விடுவிக்கப்பட்ட நிலையில் குமார கோயில் மீளவும் புனரமைப்பு செய்யப்பட்டு வழிபாடுகளும் இடம்பெற்றுவந்தது.

இந்நிலையில் கடந்த 9ம் திகதி பிள்ளையார் சிலை இருப்பிடத்திலிருந்து இடித்து பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அதனை மீள நிறுவ இந்து அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.