நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இன்றைய தினம் சீரான வானிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.