காஜல் அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்தவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் தான் ஒப்புக் கொண்ட படங்களில் இருந்து விலகிவிட்டார். அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் கர்ப்பத்தை காஜல் உறுதி செய்யவில்லை.
அவர் தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதில் காஜலின் வயிறு லேசாக பெரிதாக இருக்கிறது. அதை பார்த்தவர்களோ, காஜல் கண்டிப்பாக கர்ப்பமாக இருக்கிறார் என்கிறார்கள்.
தினமும் ஒர்க்அவுட், யோகா செய்யும் காஜலுக்கு தொப்பை இருக்க வாய்ப்பே இல்லை. அது கர்ப்பம் தான் என்கிறார்கள் ரசிகர்கள். என்ன காஜல், கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, இப்போ ஒன்னும் சொல்ல முடியாது, சரியான நேரத்தில் அறிவிக்கிறேன் என்றார்.
அக்டோபர் 30ம் தேதி தான் தனது முதல் திருமண நாளை கொண்டாடினார் காஜல். அவர் விரைவில் தாயாக வேண்டும் என்று தங்கை நிஷா தான் அதிகம் ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.