சிறுநீரக செயல் இழப்பை தடுக்க உதவும் அருமையான சூப்பை எப்படி தயாரிப்பது என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மூக்கிரட்டை கீரை – 2 கையளவு
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.
ஆரோக்கியம் நிறைந்த மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.