பிக் பாஸ் அமீரின் குடும்பத்தில் ஏற்ப்பட்ட சோகம்

பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் நுழைந்த உடனேயே முதல் வாரத்திலேயே எல்லா போட்டியாளர்களும் அவர்களது வாழக்கையில் பட்ட கஷ்டங்கள் மற்றும் துயரங்களை விவரிக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்படும். ஆனால் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகியோர் அவர்களது கதைகளை சொல்ல வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

அதை தற்போது கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். அமீர் கண்ணீருடன் அவரது கதையை சொல்லி இருப்பது இன்றைய மூன்றாம் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

நான், என் அண்ணன் மற்றும் அம்மா.. மூன்று பேர் தான் குடும்பம். அப்பாவை நான் பார்த்ததே இல்லை. அம்மாவுக்கு என்னை டான்சர் ஆக்க வேண்டும் என ஆசை. பிரபுதேவா பாடல்களை போட்டு டான்ஸ் ஆட சொல்லிக்கொண்டே இருப்பார். தற்போது இவ்ளோ பெரிய சேனல் ஷோவில் இருக்கிறேன்.. ஆனால் என் அம்மா என்னுடன் இல்லை” என எமோஷ்னலாக பேசி இருக்கிறார் அமீர்.