S.A.S.புரொடக்ஷன் S.A.S.யோகராஜ் வழங்க “கண்மணி பாப்பா” திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது.
இப்படத்தில் பல கோடி மக்களை கவர்ந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பிக்பாஸ் புகழ் ஆரி வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் ஆரியுடன் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இவர்களை பற்றிய விவரம் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.