வைரலாகும் சச்சின் தெண்டுல்கர் மகளின் புகைப்படம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர் மகள் சாரா தெண்டுல்கரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். இவருக்கு சாரா தெண்டுல்கர், அர்ஜுன் தெண்டுல்கர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் அர்ஜூன் கிரிக்கெட் துறையில் நுழைந்துவிட்ட நிலையில் தெண்டுல்கரின் மூத்த மகளான சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார்.

விளையாட்டு துறையின் பக்கம் வராத சாரா, சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் சாரா தெண்டுல்கரை சுமார் 1 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இதனால் சாரா மாடலிங் துறையில் நுழைவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சாராவிடமிருந்து எந்த வித தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில்தான் சாரா, தான் ஒரு விளம்பரத்தில் மாடலாக நடித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சாராவுடன் நடிகைகள் பனிதா சந்து, தனியா ஷெராஃப் ஆகியோரும் அந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

சாரா இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோவால் ரசிகர்கள் பைத்தியமாகி விடுவார்கள்.

இதேதான் நேற்றும் நடந்தது. அவர் கையில் ஒரு ரோஜா பூவூடன் சிரித்த முகத்தோடு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருந்த புகைப்படத்தை சாரா (கேப்சனில் ஹலோ கோவா) பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் சிறிது நேரத்தில் இணைய தளத்தில் வைரலானது.

சச்சின் மகன் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலையில் சாரா தனது மாடலிங் துறையில் சாதிப்பாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.