தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, சண்டிகர், ஒடிசா, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாவட்டங்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் நேற்று வரை 236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா விட வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்திய முழுவதும் தற்போது வரை 269 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.