நாட்டில் உயர்வடையும் நிலையில் நீர் மற்றும் மின்சார கட்டணங்கள்

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் எரிபொருள் உற்பத்தி நிலையம் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் மின் கட்டண உயர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அதே சமயம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அதன்வழியே நீர் கட்டணமும் உயர்த்த கவனம் செலுத்தப்பட வேண்டுமென நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறைந்த நுகர்வு நுகர்வோரின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்த்துவிட்டு அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்துவோரின் கட்டணத்தைக் உயர்த்த கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.