வெளிநாட்டிகள் பிள்ளைகள் பிறந்துவிட்டால் இலங்கையில் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து இங்கு கூறப்பட்டுள்ளது.
* நிரந்தர இலங்கை பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
* பிறப்பினை பதிவுசெய்வது பிறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள நிரந்தர இலங்கை தூதுவர்/ நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் ஆகும்.
* பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
தந்தை
தாய்
பிள்ளையின் பாதுகாவலர்
* பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை நிரந்தர இலங்கை தூதுவர் / நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் பெற்றுக்கொள்ளவும்.
* சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை
பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு உரிய ஆவணங்கள்
* 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
* தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
* வெளிநாட்டில் பிறப்பு நிகழ்ந்து, பிறப்பு பதிவுசெய்யப்படாத தற்பொழுது நிரந்தரமாக இலங்கைக்கு வந்திருக்கும் நபரின் பிறப்பினை பதிவு செய்துக்கொள்ள முடியும்.
அதற்காக தேவையான தகவல்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவேட்டறையின் உதவி பதிவாளர் நாயகம் அவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் தொலைலபேசி இலக்கம்: +94 112 329 773 or +94 112 433 075