டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு…

15 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும் மேல் மாகாணத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருட காலப்பகுதியில், நாட்டில் 33 ஆயிரத்து 269 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 60 வீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷிலந்தி செனவரத்ன ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

கண்டி, காலி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், திருகோணமலை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் செனவரத்ன தெரிவித்தார்.

அத்தோடு, காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைப் பெறுமாறு மக்களை வலியுறுத்தினார்.