ஜாம்பவான் டோனியின் முக்கிய சாதனையை எளிதாக முறியடிக்கப்போகும் இந்திய வீரர்!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் டோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கப்போகிறார் ரிஷப் பண்ட்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 26-ஆம் திகதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் போது டோனியின் மிகப்பெரிய சாதனையை ஒன்றினை முறியடிக்க ரிஷப் பண்ட் காத்திருக்கிறார்.

அதன்படி இதுவரை இந்திய விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை டோனி வைத்திருந்தார்.

அவர் தனது 36வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது 100 பேரை ஆட்டமிழக்க காரணமாக அமைந்து இருந்தார்.

ஆனால் தற்போது இந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடிக்க தயாராகியுள்ளார். அதாவது இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடியுள்ள பண்ட் 89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங் என 97 வீரர்கள் ஆட்டமிழக்க காரணமாக அமைந்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் 3 விக்கெட்டுகள் விழ காரணமாக இருக்கும் பட்சத்தில் குறைந்த போட்டிகளில் அதாவது 26 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துவிடுவார்.