லாஸ்லியா Cute Photos !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார். அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ‘Friendship’ படத்திலும் நடித்திருந்தார்கள். மேலும் தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

 

தற்போது மேலும் கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இப்போது லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் Christmas Dress அணிந்து போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இவரது சொக்கவைக்கும் அழகுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் மனசை பறிகொடுத்து வருகின்றனர்.