உலக பிரபஞ்ச அழகி வழங்கிய பேட்டியில் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

பெண்கள் குறித்து சமூகம் கொண்டிருக்கும் பொதுப்பார்வையை கேள்வி கேட்கும், வலிமையான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக ஹார்னாஸ் சாந்து தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 12-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற உலக பிரபஞ்ச அழகி போட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்றார். அவர், தான் வாழ்க்கையில் போராடும் இளைஞரை தான் காதலிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியிருப்பது:-

நான் ஒரு பணக்காரரை காதலிப்பதை விட வாழ்க்கையில் முன்னேற கடுமையாக போராடும் ஒரு இளைஞரை தான் காதலிக்க விரும்புகிறேன். காரணம் நானும் வாழ்க்கையில் போராடி தான் பிரபஞ்ச அழகி போட்டியில் வெற்றி பெற்றேன். இன்னும் போராடிக்கொண்டு தான் இருக்கிறேன். வாழ்க்கையில் போராட்டம் அவசியம் என நான் நாம்புகிறேன். அப்போது தான் நம்முடைய சாதனைகளுக்கு நாம் மதிப்பை வழங்க முடியும்.

திரைப்படங்களில் நடித்தால் வழக்கமான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. பெண்கள் குறித்து சமூகம் கொண்டிருக்கும் பொதுப்பார்வையை கேள்வி கேட்கும் வலிமையான பெண் கதாபாத்திரங்களில் தான் நடிக்க விரும்புகிறேன்