இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக நகரும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
அதிகரித்து வரும் டிஜிட்டல் பிளவு காரணமாக, பாடசாலைகளுக்கு டிஜிட்டல் உபகரண கட்டமைப்பு (Smart Board) மற்றும் கணினிகளை நன்கொடையாக வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று அவரால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்ப உலகத்துடன் இந்த நாட்டின் பிள்ளைகள் சமாளிப்பது இலகுவானதாக இருக்காது என புரிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
இதனைக் கருத்தில் கொண்டு, நாட்டில் உள்ள பாடசாலை கட்டமைப்புக்கு தொழில்நுட்ப முகத்தை வழங்கி முன்னோக்கிய எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.