நாட்டில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கமைய, அடுத்த வருடம் உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய நிலைமைக்கு உடனடி தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாயாக உயரலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் சந்தையில் பால் மா, எரிவாயு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தொடர்ந்தும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

உணவு பொருட்களுக்கான தட்டுப்பாட்டிற்கு மேலதிகமாக அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் உற்பத்தியை விரிவுபடுத்துவதே ஒரே தீர்வாகும். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மகா பருவ பயிர்ச்செய்கை நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.