நாட்டில் மனித கடத்தலை தடுக்க நடவடிக்கை

இலங்கையில் மனித கடத்தலைத் தடுக்க எதிர்வரும் ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் மனித கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக குறப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனிதக் கடத்தலைத் தடுக்க புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் நேரடி ஒருங்கிணைப்பில் வலுவான நிறுவன பொறிமுறையை நிறுவ கடந்த ஜூலை மாதம் மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.